KAMPUNG SUNGAI BARU குடியிருப்புவாசிகளை அரசு கைவிடாது! அமைச்சர் Datuk Seri Zaliha Mustafa உறுதி!

top-news
FREE WEBSITE AD

செப்டம்பர் 12,

கோலாலம்பூரில் உள்ள KAMPUNG SUNGAI BARU குடியிருப்புப் பகுதியில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளால் குடியிருப்புவாசிகள் பாதிக்கப்படாமல் இருக்க கட்டுமான நிறுவனத்துடன் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் முக்கிய முடிவுகள் எடுக்கவுள்ளதாகக் கூட்டரசு வளாக அமைச்சர் Datuk Seri Zaliha Mustafa தெரிவித்தார். குடியிருப்புவாசிகளைப் பாதிக்கும் எந்தவொரு மேம்பாட்டுத் திட்டத்தையும் அரசு அங்கீகரிக்கவில்லை. அதே வேளையில் KAMPUNG SUNGAI BARUவின் வரலாற்று அடையாளங்களை மாற்றி அமைக்காமல் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதாக Datuk Seri Zaliha Mustafa உறுதியளித்தார்.

மடானி அரசின் மூலமாக மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுத் திட்டங்களால் கலாச்சாரமிக்க எந்தவொரு வரலாற்றுக் குறியீடுகளும் பாதிக்காது என Datuk Seri Zaliha Mustafa நம்பிக்கை தெரிவித்தார். இது தொடர்பாக மேம்பாட்டு நிறுவனத்துடன் அமைச்சு முக்கிய சந்திப்பை நடத்தியதாகவும் பாதிக்கப்பட்டிருக்கும் குடியிருப்புவாசிகளுக்கும் அவர்களின் வாரிசுகளுக்கும் மேம்பாட்டுத் திட்டம் முடியும் வரையில் PPR வீடுகளும் DBKL வீடுகளும் வழங்கப்படும் என Datuk Seri Zaliha Mustafa தெரிவித்தார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *