கிள்ளானில் வீடுகள் இடிப்பு! குழந்தைகளுடன் வீடுகளை இழந்தவர்கள் திண்டாட்டம்!
- Thinagaren Sanggaren
- 11 Nov, 2025
நவம்பர் 11,
கிள்ளான் பண்டாமாரானில் உள்ள 20 வீடுகள் இடிக்கப்பட்டது. மேம்பாட்டுப் பணிக்காகப் பண்டாமாரானில் உள்ள குடியிருப்புப் பகுதிகளைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கும் மேம்பாட்டு நிறுவனம் சிலாங்கூர் அரசாங்கத்தின் உத்தரவை மீறி வீடுகளை இடித்திருப்பதாக அறியப்படுகிறது.
முன்னதாக சிலாங்கூர் மெந்திரி பெசார் Datuk Seri Amirudin Shari கிள்ளான் பண்டாமாரான் பகுதியில் உள்ள வீடுகளில் குடியிருப்புவாசிகள் இல்லாத கைவிடப்பட்ட வீடுகளை மட்டுமே இடிக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்த நிலையில் தற்போது சிலாங்கூர் அரசின் கட்டளையை மீறி தனியார் நிறுவனம் மக்கள் தங்கியிருந்த வீடுகளையும் இடித்ததாக PSM கட்சியின் துணைத் தலைவர் S. Arutchelvan தெரிவித்தார்.
இதனால் 3 குழந்தைகளுடன் ஒரு குடும்பம் வீட்டை இழந்திருப்பதாகவும் 55 வயதான உள்ளூர்வாசி கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. காலியான வீடுகளை மட்டுமே இடிப்பதாக வலியுறுத்தப்பட்டிருந்த நிலையில் தாங்கள் தங்கியிருந்த வீட்டையும் இடித்து விட்டதாக 55 வயதான முதியவர் தெரிவித்தார்.
வாழ்வாதாரம் இல்லாத இளம் தம்பதியர் 3 குழந்தைகளுடன் கைவிடப்பட்ட ஒரு வீட்டில் தங்கியிருந்த நிலையில் அந்த வீட்டையும் இடித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணிக்கு வீடுகளை இடிக்கும் பணிகள் தொடங்கிய நிலையில் தற்போது வீடுகளை இழந்தவர்கள் வசிப்பிடமில்லாமல் கைவிடப்பட்ட நிலையில் உள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



