மாடியிலிருந்து விழுந்து சிறுமி பலி! சம்பவ இடத்தில் துணையமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினரும்!

top-news

ஏப்ரல் 22,

செந்தூலில் உள்ள Batu Muda PPR அடுக்குமாடிக் குடியிருப்பின் ஆறாவது மாடியிலிருந்து விழுந்து 12 வயது சிறுமி உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் ஒற்றுமை துறை துணை அமைச்சர் செனட்டர் Saraswathy Kandasami, BATU நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரனும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 

பிற்பகல் 2.24 மணிக்குச் செந்தூல் காவல் நிலையத்திற்குப் பெறப்பட்ட அவசர அழைப்பை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்ததாகச் செந்தூல் மாவட்டக் காவல் ஆணையர் Ahmad Sukarno Zahari தெரிவித்தார். உயிரிழந்த 12 வயது சிறுமி ஆறாவது மாடியில் உள்ள தனது வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருக்கும் போது தவறி விழுந்ததாக நம்பப்படுவதாகவும் சம்மந்தப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியில் எந்தவொரு CCTV யும் இல்லை என்றும் செந்தூல் மாவட்டக் காவல் ஆணையர் Ahmad Sukarno Zahari தெரிவித்தார்.

Seorang kanak-kanak perempuan berusia 12 tahun maut selepas terjatuh dari tingkat enam PPR Batu Muda di Sentul. Timbalan Menteri Perpaduan dan Ahli Parlimen Batu hadir di lokasi. Polis menyiasat kejadian yang tiada rakaman CCTV.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *