வீட்டின் சுவர் விழுந்து 2 வயது சிறுமி மரணம்! – சிரம்பான்!
- Thinagaren Sanggaren
- 05 Oct, 2025
அக்தோபர் 5,
வீட்டின் வாசல் சுவர் இடிந்து விழுந்ததில் 2 வயது சிறுமி
உயிரிழந்தார். சிரம்பானில் உள்ள Taman Bukti
Kristal குடியிருப்புப் பகுதியில் இரவு 7.15 மணிக்கு இச்சம்பவம் நிகழ்ந்ததாகச் சிரம்பான்
மாவட்டக் காவல் ஆணையர் Mohamad Hatta
Che Din தெரிவித்தார். சிறுமிகள் ஒன்றாக வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருக்கும் போது
சுவர் இடிந்து 2 வயது சிறுமியின் மீது விழுந்ததாக நம்பப்படுகிறது.
உடனடியாகக் குடும்பத்தினர் பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டு Tuanku Jaafar அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகவும் படுகாயம் அடைந்த 2 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி இரவு 9.14 மணிக்கு உயிரிழந்ததாகச் சிரம்பான் மாவட்டக் காவல் ஆணையர் Mohamad Hatta Che Din தெரிவித்தார். சுவர் இடிந்து 2 வயது சிறுமியின் தலையில் விழுந்ததால் அவர் உயிரிழந்திருப்பதாகப் பிரேதப் பரிசோதனையில் உறுதிச் செய்யப்பட்டிருப்பதால் இது ஒரு விபத்து என சிரம்பான் மாவட்டக் காவல் ஆணையர் Mohamad Hatta Che Din உறுதிப்படுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



