மலேசிய கடலில் அனுமதியின்றி 62,000 லிட்டர் டீசலுடன் நிறுத்தப்பட்ட கப்பல்! MARITIM சோதனை!
- Sangeetha K Loganathan
- 04 Jul, 2025
ஜூலை 4,
கிள்ளான் துறைமுகத்தில் வெளிநாட்டுக் கப்பல் அனுமதியின்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கடல்சார் பாதுகாப்பு ஆணையம் கப்பலை முழுவதுமாகப் பறிமுதல் செய்துள்ளது. நேற்று நண்பகல் 1.30 மணிக்கு மலேசிய எல்லை கடல் வழியாகச் சென்ற சரக்கு கப்பல் திடீரென கிள்ளான் துறைமுகத்தை நோக்கி வந்ததாக நம்பப்படுகிறது. அனைத்துலக நிறுவனத்திற்குச் சொந்தமான கப்பலில் 62,000 லிட்டர் டீசல் எண்ணெய் இருப்பதைக் கடல்சார் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் கண்டறிந்ததாகவும் கப்பலைச் சோதனையிட கப்பல் கேப்டன் அனுமதிக்காததால் கப்பலை முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் சிலாங்கூர் மாநிலக் கடல்சார் பாதுகாப்பு ஆணையத்தின்ன்Abdul Muhaimin Muhammad Salleh தெரிவித்தார்.
சம்மந்தப்பட்ட கப்பலின் கேப்டனும் அவரின் 6 உதவியாளர்களும் விசாரணைக்காகக் கப்பலிலேயே தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் மலேசியவில் தரையிறங்க அனுமதியில்லை என்றும் Abdul Muhaimin Muhammad Salleh தெரிவித்தார். சம்மந்தப்பட்ட கப்பலின் கேப்டன் 62,000 லிட்டர் டீசல் எண்ணெய்யைக் கொண்டு செல்வதற்கான எந்தவோர் ஆவணங்களையும் கொண்டிருக்கவில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகத்தின் (KPDN) சிறப்பு அனுமதி அல்லது உரிமம் இல்லாமல் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களை வைத்திருக்க, சேமித்து வைக்க மற்றும் எடுத்துச் செல்ல அனுமதி அளித்ததற்கான எந்தவொரு ஆவண ஆதாரத்தையும் சமர்ப்பிக்கத் தவறியதற்காகவும் கப்பலை முழுமையாக தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் சிலாங்கூர் மாநிலக் கடல்சார் பாதுகாப்பு ஆணையத்தின்ன் Abdul Muhaimin Muhammad Salleh தெரிவித்தார்.
Sebuah kapal kargo asing dengan 62,000 liter diesel ditahan Maritim Malaysia di Pelabuhan Klang kerana berlabuh tanpa izin. Kapten kapal gagal kemuka dokumen sah, menyebabkan kapal dirampas dan tujuh kru ditahan untuk siasatan lanjut di atas kapal.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



