ஹோர்முஸ் பாதையைக் கடக்க மலேசிய கப்பல்களுக்கு அனுமதி – ஈரான் உறுதி
- Surendran Sumdraraj
- 31 Mar, 2026
கோலாலம்பூர், மார்ச் 31-
மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஹோர்முஸ் வழியாக மலேசியாவிற்குச் சொந்தமான குறைந்தது ஏழு கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்லும் என ஈரான் உறுதியளித்துள்ளதாக மலேசியாவிற்கான ஈரான் தூதர் வாலியொல்லா முகம்மதி நஸ்ரபாதி தெரிவித்ததார்.
பெர்சியக் வளைகுடாவில் உள்ள மலேசிய கப்பல்கள் குறித்து தகவல் பெறப்பட்டுள்ளதாகவும், அவை ஹோர்முஸ் வழியைக் கடக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
“மலேசிய வெளியுறவு அமைச்சரிடமிருந்து இந்த கப்பல்களின் இருப்பு மற்றும் அவை அந்த முக்கிய கடல் பாதையைப் பயன்படுத்த விரும்புகின்றன என்ற தகவலைப் பெற்றோம். இதனை பரிசீலித்துள்ளோம். இன்ஷா அல்லாஹ், அவை பாதுகாப்பாக அந்த வழியாகச் செல்லும். எந்தப் பிரச்சினையும் இல்லை,” என்று அவர் கூறினார்.
மேலும், மலேசியா ஒரு நட்பு நாடாக இருப்பதால், அதன் கப்பல்களுக்கு அந்த கடல் பாதையைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படுவதாகவும் அவர் வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



