விஜயின் பிரச்சாரத்தில் உயிரிழந்தோருக்குத் தலா 20 லட்சம் நிவாரணம்! - த.வெ.க!

top-news
FREE WEBSITE AD

நடிகர் விஜயின் அரசியல் பிரச்சாரத்தில் உயிரிழந்த 39 பேருக்கும் தலா 20லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். மேலும் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவருக்கும் தலா 2 லட்சம் ரூபாய் வழங்குவதாகவும் மருத்துவச் செலவுகளைத் தமிழக வெற்றிக் கழகம் ஏற்பதாகவும் விஜய் தெரிவித்தார். 

நேற்றிரவு தமிழ்நாட்டிலுள்ள கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் 17 பெண்கள் என மொத்தம் 39 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 52 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் 11 பேர் தீவிரச் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிய வந்துள்ளது. 10,000 பேர் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்த்த நிலையில் 27,000 க்கும் மேலானவர்கள் கூடியதால் இந்த நெரிசல் ஏற்பட்டதாகத் தமிழ்நாடு காவல்துறை தலைவர் டி.ஜி.பி., வெங்கட்ராமன் தெரிவித்தார். 

பிரதமர் மோடியின் சிறப்பு நிதியாக உயிரிழந்தவர்களுக்குத் தலா 2 லட்ச ரூபாயும் காயமடைந்தவர்களுக்குத் தலா 50,000 ரூபாயும் வழங்கபடுவதாக இந்திய பிரதமர் மோடி அறிவித்திருந்த நிலையில் தமிழ் நாடு அரசு உயிரிழந்தவர்களுக்குத் தலா 10 லட்சமும், காயமடைந்தவர்களுக்குத் தலா 1 லட்ச ரூபாயும் வழங்குவதாகவும் தழிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

இது குறித்து விரிவான விசாரணையை நடத்தவிருப்பதாகவும் இன்று காலை ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை கரூருக்கு விசாரணைக் குழு விரைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *