RM 53 மில்லியன் மதிப்பிலானக் கடத்தல் பொருள்கள் பறிமுதல்! – பெர்லிஸ் சுங்கத்துறை!
- Thinagaren Sanggaren
- 29 Jan, 2026
ஜனவரி 29,
மலேசியாவின் எல்லை பகுதியான பெர்லிஸ் வழியாக மலேசியாவுக்குள் கடத்தப்படும் பொருள்களைப்- பெர்லிஸ் சுங்கத்துறையினர் தொடர்ந்து பறிமுதல் செய்து வருவதாகவும் கடந்த ஆண்டு 167 வழக்குகளைப் பெர்லிஸ் சுங்கத்துறை கையாண்டிருப்பதாகப் பெர்லிஸ் மாநிலச் சுங்கத்துறை இயக்குநர் Ismail Hashim தெரிவித்தார். கடந்த ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் மதிப்பு 53 மில்லியன் என்றும் அதில் 24 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலானப் போதைப்பொருள்களும் அடக்கம் என Ismail Hashim தெரிவித்தார்.
இவ்வாண்டு தொடக்கத்தில் தாய்லாந்திலிருந்து மலேசியாவுக்குள் கடத்த முயற்சித்த 40,300 ரிங்கிட் மதிப்பிலான 13 கிலோ கஞ்சாவும் சிகரெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக பெர்லிஸ் மாநிலச் சுங்கத்துறை இயக்குநர் Ismail Hashim தெரிவித்தார். நள்ளிரவில் அடையாளம் காணப்படாத படகில் கருப்பு பெட்டிகளை ரோந்து பணியிலிருந்த அதிகாரிகள் கண்டதும் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்ததாகவும் இறுதி வரையும் எந்தவொரு கும்பலும் படகிலிருந்த பெட்டிகளை எடுக்க வராததால் அனைத்து பெட்டிகளையும் பறிமுதல் செய்ததாக பெர்லிஸ் மாநிலச் சுங்கத்துறை இயக்குநர் Ismail Hashim தெரிவித்தார்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



