கூரியர் மூலம் கடத்த முயன்ற RM513,045 மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
- Surendran Sumdraraj
- 10 Jul, 2026
ஷா ஆலாம், ஜூலை 10-
கூரியர் சேவையைப் பயன்படுத்தி பல்வேறு வகையான போதைப்பொருட்களைக் கடத்த முயன்ற நடவடிக்கையை அரச மலேசிய சுங்கத் துறை முறியடித்துள்ளதாக சிலாங்கூர் சுங்கத்துறை இயக்குநர் Mohamad Azhar Ahmad Paharazi தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட தனித்தனி நடவடிக்கைகளில் மொத்தம் RM513,045 மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறினார்.
முதல் சம்பவம் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி சிப்பாங் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஒரு கூரியர் நிறுவனத்தின் அஞ்சல் மையத்தில் கண்டறியப்பட்டது.
இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கூரியர் பெட்டியைச் சோதனை செய்தபோது, அதில் 781 கிராம் எடையுள்ள கஞ்சா பூக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்த கஞ்சா பூக்களின் மதிப்பு சுமார் RM62,480 என மதிப்பிடப்பட்டுள்ளது.
சுங்கத்துறையினரின் கண்காணிப்பில் சிக்காமல் இருக்க, அந்தப் பொருட்கள் மெழுகுவர்த்தி தயாரிப்பு, உடல் பராமரிப்பு, தோல் பராமரிப்பு, சோப்பு அடிப்படையிலான பொருட்கள் என தவறாக அறிவிக்கப்பட்டிருந்ததாக Mohamad Azhar கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



