அமேரிக்க தூதரகத்தை முற்றுகையிடுவதில் பயனில்லை! - உள்துறை அமைச்சர்

top-news
FREE WEBSITE AD

அக்தோபர் 3,

நேற்று மாலை தலைநகரில் உள்ள அமேரிக்க தூதரகத்தின் முன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல்துறை கைது செய்திருக்கும் நடவடிக்கையில் எந்தவொரு வரம்பு மீறலும் இல்லை என உள்துறை அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution Ismail தெரிவித்தார். இஸ்ரேலில் கைது செய்யப்பட்டிருக்கும் மலேசியர்கள் பாதுகாப்பாக மலேசியா திரும்ப வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு அனைத்து மலேசியர்களுக்கும் இருப்பதாகவும் இதனால் அமேரிக்க தூதரகத்தை முற்றுகையிடுவதில் பயனில்லை என்றும் Datuk Seri Saifuddin Nasution Ismail தெரிவித்தார்.

பொதுமக்கள் ஒன்றுக்கூடவும் போராட்டம் நடத்தவும் உரிமை உள்ளது. ஆனால் அப்படியான போராட்டம் பொது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவோ ஒழுங்கற்ற முறையிலோ இருக்க கூடாது என்பதையும் Datuk Seri Saifuddin Nasution Ismail வலியுறுத்தினார். வரம்புகளை மீறி செயல்படும் ஒரு சிலரைக் காவல்துறை கைது செய்துள்ளது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் பொது ஒழுங்கை மீறாமல் இருக்க வேண்டும். பாதுகாப்புப் பணிகளில் உள்ள காவல்துறையினர் போராட்டக்காரர்களுக்கு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்குவது போல போராட்டக்காரர்கள் பொது அமைதியைப் பாதிக்காமல் இருக்க வேண்டும் என Datuk Seri Saifuddin Nasution Ismail வலியுறுத்தினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *