தீயில் கருகிய பொதுமண்டபம்! ஒருவர் கைது! - Teluk Intan

top-news

நவம்பர் 5,

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பட்டாசு வெடித்ததில் தெலுக் இந்தான் நகரில் உள்ள Arena Square அரசு பொது மண்டபம் தீயில் கருகியது. தீ ஏற்பட்டதற்கானக் காரணம் பட்டாசு வெடிப்பு ஊன தடயவியல் துறை தெரிவித்த நிலையில் 24 வயது நிகழ்ச்சி ஏற்பாட்டாளரைக் காவல் துறை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக Hilir Perak மாவட்டக் காவல் ஆணையர் Ahmad Adnan Basri தெரிவித்தார். 

கடந்த ஞாயிறு இரவு 11.40 மணிக்குத் தீ ஏற்பட்டதாகவும் அதன் தொடர்ச்சியாக இக்கைது நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது மண்டபத்தின் கூரைகளில் பட்டாசுகளை வெடிக்கும்படியான CCTV ஆதாரங்களின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட 24 வயது ஆடவரிடம் விசாரணையை நடத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.

Arena Square Teluk Intan terbakar akibat letupan mercun semasa majlis hari jadi. Polis menahan penganjur berusia 24 tahun untuk siasatan berdasarkan bukti CCTV menunjukkan mercun dibakar di bumbung.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *