தீயில் கருகிய 2 வணிகக் கடைகள்!

- Sangeetha K Loganathan
- 17 Mar, 2025
மார்ச் 17,
கெடா Changlun சாலையில் உள்ள அமைந்துள்ள வணிகக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 வணிகக் கடைகள் முற்றிலும் தீயில் கருகியது. நேற்றிரவு 9.13 மணிக்கு அவசர அழைப்பைப் பெற்ற நிலையில் சம்பந்தப்பட்ட பகுதிக்கு 20 தீயணைப்பு அதிகாரிகள் விரைந்ததாகக் கெடா மாநிலத் தீயணைப்பு ஆணைய உதவி இயக்குநர் FATAF AMDAN தெரிவித்தார்.
சம்மந்தப்பட்ட வணிகக் கடையில் ஏற்பட்ட மின்சாரக் கோளாறால் அதனை ஒட்டி இருந்த மற்றொரு பெரு வணிகக் கடைக்கும் தீ பரவியதாகவும் 2 வணிகக் கடைகளிலும் நெகிழி பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் என்பதால் தீ வேகமாகப் பலவியதாக அவர் தெரிவித்தார். வணிகக் கடைகள் 90% முழுமையாகத் தீயில் கருகியதாகவும் எந்தவோர் உயிரிழிப்பும் ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Dua kedai di Changlun, Kedah musnah dalam kebakaran akibat masalah elektrik. Api merebak dengan pantas kerana kedai menjual barangan plastik. Tiada kemalangan jiwa dilaporkan. Seramai 20 anggota bomba dikerahkan ke lokasi untuk mengawal kebakaran.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *