Putra Heights பெட்ரோனாசில் தீ விபத்து!

top-news

ஏப்ரல் 1,

இன்று காலை சிலாங்கூர் Putra Height பகுதியில் உள்ள Petronas எரிவாயு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8.10 மணிக்குத் தீ விபத்துக் குறித்தான அவசர அழைப்புப் பெற்றதாகச் சிலாங்கூர் மாநிலத் தீயணைப்பு மீட்பு ஆணைய இயக்குநர் Wan Md Razali Wan Ismail தெரிவித்தார். 


மண்ணுக்கடியில் புதைக்கப்பட்ட எரிவாயு குழாயிலிருந்து தீ பரவியதால் சுமார் 500 மீட்டர் சுற்றளவில் சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் சம்மந்தப்பட்ட பகுதியில் பொதுமக்கள் நுழைய தடைவிதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ பரவியிருக்கும் பகுதிகளில் உள்ள குடியிருப்புவாசிகள் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டிருப்பதாகவும் காலை 11 மணி நிலவரப்படி தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாகவும் சிலாங்கூர் மாநிலத் தீயணைப்பு மீட்பு ஆணைய இயக்குநர் Wan Md Razali Wan Ismail தெரிவித்தார்.

Kebakaran berlaku di stesen Petronas Putra Heights pagi ini akibat kebocoran paip gas bawah tanah. Jalan sekitar 500 meter ditutup dan penduduk berhampiran dipindahkan sementara. Pasukan bomba masih berusaha mengawal api sejak menerima panggilan kecemasan pada 8.10 pagi.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *