பாங்காக் தீ விபத்தில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 13-

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள ஒரு பொழுதுபோக்கு மையத்தில் ஏற்பட்ட பெரிய தீ விபத்தில், இதுவரை எந்த மலேசியரும் பாதிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை என விஸ்மா புத்ரா உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த தீ விபத்தில் குறைந்தது 27 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், 63 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 22 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஸ்மா புத்ரா இன்று வெளியிட்ட அறிக்கையில், இந்த தீ விபத்து நேற்று நடந்ததாகவும், பாங்காக்கில் உள்ள மலேசிய தூதரகம் சம்பவத்திற்குப் பிறகான நிலைமைகளை நெருக்கமாகக் கண்காணித்து வருவதாகவும் கூறியது.

மலேசியர் யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை உறுதி செய்ய, தூதரகம் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து தாய்லாந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பாங்காக்கில் உள்ள மலேசியர்கள் மற்றும் அங்கு பயணம் செய்யும் சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் அதிகாரிகள் வழங்கும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு நினைவூட்டப்பட்டுள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *