தாமான் மேடான் தீயில் கருகிய 2 வீடுகள்!
- THINAGAREN SANGGAREN
- 29 Mar, 2026
மார்ச் 29,
பெத்தாலிங் ஜெயாவில் உள்ள தாமான் மேடான் குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 அடுக்குமாடி வீடுகள் முழுமையாகக் கருகியது. நேற்று மாலை 5.34 மணிக்குத் தீவிபத்து குறித்து பொதுமக்களிடமிருந்து அவசர அழைப்பைப் பெற்றதும் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகச் சிலாங்கூர் மாநிலத் தீயணைப்புத் துறை உதவி இயக்குநர் Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார். முதல் வீடு 80% தீயில் கருகியதாகவும் இரண்டாவது வீடு 50% தீயில் கருகியதாகவும் Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார்.
சுமார் 21 தீயணைப்பு அதிகாரிகளுடன் பொதுமக்களும் தீயைக் கட்டுப்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என Ahmad Mukhlis Mukhtar உறுதிப்படுத்தினார். மாலை 6.30 மணிக்குத் தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் மற்ற வீடுகளுக்குத் தீ பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் சிலாங்கூர் மாநிலத் தீயணைப்புத் துறை உதவி இயக்குநர் Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார். தீ ஏற்பட்டதற்கான காரணத்தைத் தடயவியல் அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகத் தெரிய வந்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



