நகரத் தூய்மை அனைவரின் பொறுப்பு - ஙா கோர் மிங்

top-news

கோலாலம்பூர், டிச. 26-

வீட்டுவசதி, உள்ளாட்சி அமைச்சர் ஙா கோர் மிங், நகரங்களின் தூய்மையைப் பேணுவது அரசாங்கம், உள்ளூராட்சி அதிகாரிகள் (PBT) மட்டுமல்ல, அனைவரின் கூட்டுப் பொறுப்பு என்று வலியுறுத்தியுள்ளார்.

வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், சிலர் இன்னும் சாலைகளிலும் பொது இடங்களிலும் குப்பைகளை வீசும் செயலை அமைச்சர் கடுமையாகக் கண்டித்தார். குறிப்பாக நகர மையப் பகுதிகளிலும், பொதுமக்கள் கூடும் இடங்களிலும் இது அதிகம் நடப்பதாக அவர் வருத்தம் தெரிவித்தார்.

"மலேசியா முன்னேறிய நாடாக மாறும் பாதையில் உள்ளது. 2026-ஆம் ஆண்டு (Visit Malaysia 2026) கொண்டாட்டத்தை வரவேற்கத் தயாராகி வருகிறோம். ஆனால் இத்தகைய பொறுப்பற்ற செயல்கள் நகரங்களின் அழகை கெடுப்பதோடு, நாட்டின் பெயரையும் உலக அரங்கில் களங்கப்படுத்துகின்றன" என்று ஙா கோர் மிங் வருத்தம் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *