பெர்சத்து பொதுக்கூட்டத்தில் கலவரம்! காவல் அதிகாரிகள் தலையீடு! பெர்சத்து தலைமை விளக்கம்!
- Thinagaren Sanggaren
- 07 Sep, 2025
செப்டம்பர் 7,
நேற்று ஷா அலாம் IDCC அரங்கில் நடைபெற்ற பெர்சத்துவின் 8-ஆம் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் கட்சியினரிடையே கலவரம் மூண்டது. இது தொடர்பானக் காணொலிகள் சமூகவலைத்தலங்களில் பரவியதை அடுத்து கலவரத்தில் ஈடுபட்ட பெர்சத்து கட்சியினரைக் காவல் அதிகாரிகள் தடுத்து நிலமையைக் கட்டுப்படுத்தியதாகத் தெரிய வந்துள்ளது. பெர்சத்துக் கட்சியின் தலைவர் Tan Sri Muhyiddin Yasin தலைமை உரையை நிகழ்த்தும் போது குறிப்பிட்ட பெர்சத்து கட்சியினர் முகைதீனுக்கு எதிராகக் குரல் எழுப்பியதால் முகைதீன் ஆதரவாளர்களுக்கும் முகைதீன் எதிர்ப்பாளர்களும் இடையில் இந்த மோதல் ஏற்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.
பெர்சத்துவின்
8 ஆம் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் 2,700 பெர்சத்து உறுப்பினர்கள் பங்கேற்ற நிலையில் இது குறிப்பிட்ட ஒரு சிலரால் நிகழ்த்தப்பட்டது
என பெர்சத்து கட்சியின் தலைமை தொடர்பாளர் Datuk Tun Faisal Ismail Aziz தெரிவித்தார். இந்த மோதல் இரு தனிநபருக்கிடையிலான கருத்து முரணால் நிகழ்ந்தது
என்றும் நாடு முழுவதும் உள்ள பெர்சத்துவின் கட்சி உறுப்பினர்கள் முகைதீன் தலைமையை ஆதரிப்பதாகவும்
கூட்டத்தில் ஏற்பட்ட மோதலுக்கும் கட்சியின் தலைமைக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்றும்
Datuk Tun Faisal Ismail Aziz விளக்கமளித்தார். இது தொடர்பான
பெர்சத்துக் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் மோதல்
ஏற்பட்டதற்கானக் காரணத்தை ஒழுங்கு நடவடிக்கைக் குழு கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை
மேற்கொள்ளும் என்றும் மோதலில் ஈடுப்பட்ட ஒரு சில தரப்பினர் மீது காவல்துறையிடம் புகார்
ஏதும் அளிக்கப்படவில்லை என Datuk Tun Faisal Ismail Aziz தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



