கெடாவைப் புறக்கணிக்கும் அன்வார்! – சனூசி குற்றச்சாட்டு!
- Thinagaren Sanggaren
- 18 Jul, 2025
ஜூலை 18,
அன்வார் தலைமையிலான மடானி அரசால் கெடா மாநில அரசு ஒதுக்கப்படுவதாகக் கெடா மாநில மெந்திரி பெசார் Datuk Seri Muhammad Sanusi Md Nor குற்றம்சாட்டினார். கெடாவில் பெரிக்காத்தான் ஆட்சி நிலவுவதால் அன்வாரின் ஒற்றுமைக் கூட்டணி மொத்தமாகக் கெடாவை மறந்துவிட்டதாகவும் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை மனதில் வைத்துக் கொண்டு அன்வார் கெடா மக்களுக்கான நலத்திட்டங்களைச் செயல்படுத்தாமல் தவிர்ப்பதாகவும் Datuk Seri Muhammad Sanusi Md Nor தெரிவித்தார். அன்வார் ஆட்சி என்பது மடானி ஆட்சியில்லை, அது பாகுபாடு ஆட்சி என Datuk Seri Muhammad Sanusi Md Nor சுட்டிக்காட்டினார்.
மடானி அரசு என்பது
நாட்டின் அனைத்து மாநிலங்களையும் ஒன்றிணைத்து செயல்பட வேண்டும் என்பதை மறந்து நிதி
பங்கீட்டிலும் மக்கள் நலத்திட்டங்களிலும் கெடாவைப் புறக்கணிக்கிறது. முக்கியமாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான
நிதி பங்கீட்டில் கெடா நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பாகப் பெரிக்காத்தான் நாடாளுமன்ற
உறுப்பினர்களை ஓரங்கட்டுவதாக Datuk Seri Muhammad Sanusi Md Nor சுட்டிக்காட்டினார். கெடாவைப் புறக்கணித்த, கெடா மக்களை மறந்த அன்வாரின் ஆட்சிக்கு
எதிராக 26 ஜூலை தலைநகரில் நடைபெறும் TURUN ANWAR பேரணியில் கெடா
மக்கள் ஆர்வத்துடன் வீருகொண்டு பங்கேற்க வேண்டும் என Datuk Seri Muhammad Sanusi Md Nor அழைப்பு விடுத்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



