திருட்டின் போது போலிசாரைக் கொலை செய்த கும்பல் கைது!
- Thinagaren Sanggaren
- 08 Aug, 2025
ஆகஸ்ட் 8,
கெடாவில் உள்ள ஒரு வீட்டில் திருடிய கும்பலைப் பிடிக்க முயன்ற காவல் அதிகாரியை வாகனத்தால் மோதி கொலை செய்ததாக நம்பப்படும் நால்வரை 7 நாள்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க Alor Setar நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று காலை கெடாவில் உள்ள TAMAN GOLF வீட்டில் கொள்ளையடித்த கும்பலைத் துரத்திய 35 வயது காவல் அதிகாரியின் மீது வாகனத்தை மோதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொள்ளையடித்த கும்பலைச் சேர்ந்த ஆடவர் ஒருவரைச் சம்பவ இடத்திலேயே கைது செய்த காவல் துறையினர் மேலும் மூவரை நேற்று மாலை கைது செய்ததாகக் கெடா மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Adzli Abu Shah தெரிவித்தார்.
கொள்ளை மற்றும் கொலை குற்றங்களில் ஈடுபட்டிருக்கும்
நால்வர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்கள் முன்னமே 77 கொள்ளை சம்பவங்களில்
ஈடுபட்டிருந்ததற்காகத் தேடப்பட்டு வந்ததாக Datuk Adzli Abu Shah தெரிவித்தார். கைது செய்யப்பட்டிருக்கும் நால்வரும்
24 முதல் 26 வயதுள்ள உள்ளூர் ஆடவர்கள் என்றும் நால்வரும் ஜொகூரைச் சேர்ந்த ஒரே குடியிருப்புவாசிகள்
என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கெடா மாநிலக் காவல்துறை தலைவர் Datuk
Adzli Abu Shah தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



