கெடா பின்தங்கிய மாநிலமா? தேவையில்லாமல் பேசாதீர்! சனூசி எச்சரிக்கை!
- Sangeetha K Loganathan
- 10 Jul, 2025
ஜூலை 10,
மற்ற மாநிலங்களை விடவும் கெடா மாநிலம் பின் தங்கிய மாநிலமாக இருப்பதாகவும் கெடா மாநில அரசு நிலையற்ற அரசாக இருப்பதாகவும் அம்னோ உச்சமன்ற உறுப்பினரும் துணை அமைச்சருமான Datuk Seri Ahmad Maslan தெரிவித்திருக்கும் கருத்தைக் கெடா மாநில மெந்திரி பெசாரும் பாஸ் கட்சியின் தலைமை அதிகாரியுமான Datuk Seri Muhammad Sanusi Md Nor மறுத்தார். கெடாவில் பாஸ் கட்சியின் தலைமையிலான ஆட்சிக்குப் பின்னர் கெடாவிற்கு உண்மையான வளர்ச்சி என்றால் என்ன, நாட்டின் இறையான்மை மீதான நம்பிக்கையையும் மேம்படுத்தியிருப்பதாக Datuk Seri Muhammad Sanusi Md Nor தெரிவித்தார்.
என்ன வேண்டுமென்றாலும் பேசலாம். கெடாவிற்கு வந்து பார்த்து அம்னோவினர் இப்படி பேசுவார்களா? கெடாவில் தேர்தல் நடந்தால் பாரிசான் ஒரு சட்டமன்றத்தில் கூட வெற்றிப் பெறாது என்றும் கடந்த கெடா மாநிலச் சட்டமன்றத் தேர்தலின் போது 36 சட்டமன்றங்களில் பாரிசான் ஒரு சட்டமன்றத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பதை Datuk Seri Muhammad Sanusi Md Nor நினைவூட்டினார். நாளையே தேர்தல் நடந்தாலும் கெடாவில் பாஸ் கட்சி பெரும்பான்மையைப் பெற்று ஆட்சி அமைக்கும் என Datuk Seri Muhammad Sanusi Md Nor சாடினார்.
Sanusi Md Nor menafikan dakwaan Kedah negeri paling mundur seperti dikatakan Ahmad Maslan. Beliau menegaskan Kedah di bawah pimpinan PAS terus membangun dan mempunyai sokongan rakyat kukuh malah yakin PAS kekal berkuasa jika pilihan raya diadakan semula.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



