கெடா அரசு சூதாட்ட உரிமங்களை புதுப்பிக்க மறுப்பு விவகாரம், கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு
- Tamil Malar (Reporter)
- 22 Dec, 2025
சிக், டிச. 22-
கெடா அரசு, சூதாட்டம், லாட்டரி விற்பனை செய்யும் வணிக வளாக உரிமங்களை புதுப்பிக்க மறுத்த தீர்மானத்தை பாதுகாக்க, வழக்கை கூட்டரசு நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லும் என்று அறிவித்துள்ளது.
கெடா மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முஹம்மது சானுசி முகமட் நோர் கூறுகையில், இந்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை. ஏனெனில் அது மக்களின் ஆணையுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கொள்கையுடன் ஒத்துப்போகிறது என்றார்.
“நாங்கள் நிறுத்திக்கொள்ள மாட்டோம், போராடுவோம். இந்த தீர்ப்பில் நான் ஏமாற்றமடைந்துள்ளேன். ஆனால் இந்த வழக்கை மத்திய நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வோம்.
“நமது வாதங்கள் சிறப்பாக, முழுமையாக விளக்கப்பட்டு புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்று பிரார்த்திப்போம். இதுவே எங்களை அரசாக தேர்ந்தெடுத்த மக்களின் விருப்பம். ஏன் எங்கள் தேர்வை மதிக்கக்கூடாது?” என்று கேள்வி எழுப்பினார்.
இவ்வாறு அவர், சிக் பகுதி பாஸ் கட்சியின் 41வது ஆண்டுவிழா, 16வது பொதுத் தேர்தல் (PRU-16) இயந்திரத்தை தொடங்கும் நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
கடந்த டிசம்பர் 12ஆம் தேதி, மேல்முறையீட்டு நீதிமன்றம் (Court of Appeal) கெடா அரசின் மேல்முறையீட்டை 2-1 பெரும்பான்மை தீர்ப்பால் நிராகரித்தது. சூதாட்ட உரிமங்கள் தொடர்பான விவகாரம் கூட்டரசு அதிகாரத்துக்குள் வருவதால், மாநில அரசு அதை தடுக்க முடியாது என்று தீர்ப்பளித்தது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



