பத்துமலையில் சுகாதாரமற்ற கடைகளில் ஆய்வு! 3 கடைகளுக்கு நோட்டிஸ்!

top-news
FREE WEBSITE AD

ஜனவரி 28,

பத்துமலையில் தைப்பூசத்தை முன்னிட்டு அதிகமான எண்ணிக்கையில் பக்தர்கள் வருவதால் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கடைகளின் சுகாதாரம் வழக்கத்திற்கும் மேலாகக் கண்காணிக்கப்பட வேண்டும் என SELAYANG நகராண்மைக் கழகம் வலியுறுத்தியுள்ளது. இன்று காலை பத்துமலை கோயில் வளாகத்தில் அமைந்திருக்கும் 37 வணிக வளாகங்களிலும் சிலாங்கூர் மாநிலச் சுகாதாரத் துறை கோம்பாக் KPDN, கழிவு மேலாண்மை வாரியம், ஆகிய அமலாக்க அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில் 3 வணிகக் கடைகளுக்கு நோட்டிஸ் வழங்கப்பட்டிருப்பதாக SELAYANG நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது. 

உரிமம் இல்லாமல் வணிகம் செய்தல்,  அறிவிப்புப் பலகை, விளம்பரப் பலகைகள், விலைப்பட்டியல் ஆகியவைச் சட்டத்தை மீறியிருத்தல் ஆகிய குற்றங்களுக்குச் சம்மன் வழங்கப்பட்டிருப்பதாகவும் SELAYANG நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது. பத்துமலையில் வழக்கமான நாள்களை விடவும் தைப்பூசத் திருநாளில் அதிகமான மக்கள் கூடுவார்கள். பெருமளவில் கூடும் கூட்டத்தைக் கவரும் வகையில் சட்டவிதிகளுக்கு உட்படாத விளம்பரங்களை நீக்கியிருப்பதாகவும் குறிப்பாக வணிகக் கடைகளில் விற்கப்படும் பொருள்களின் விலை KPDN நிர்ணயித்த விலைகளை விடவும் அதிகமாக இருப்பதாகவும் SELAYANG நகராண்மைக் கழகம் கண்டறிந்திருக்கும் நிலையில் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *