34, 400 மலைச் சாரல்கள் மீது ஜேகேஆர் தீவிர கண்காணிப்பு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப். 20-

நாடு முழுமையிலும் உள்ள மொத்தம் 34,400 மலைச் சாரல்கள் மீது பொதுப்பணி இலாகா (ஜேகேஆர்) தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது.“மிக ஆபத்தான" அந்த மலைச் சாரல்கள், நாடு முழுமையிலும் உள்ள கூட்டரசு மற்றும் மாநிலச் சாலைகளில் இருக்கின்றன.

"பகாங்கின் சிம்பாங் பூலாயிலிருந்து கேமரன் மலைக்குச் செல்லும் சாலை நெடுகிலும் உள்ள அந்த "மிக ஆபத்தான” மலைச் சாரல்கள் மிக அணுக்கமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக, ஜேகேஆர் மலைச் சாரல்கள் டெ சாரல்கள் பொறியியல் இயக்குநர் கள் பொறியியல் இயக்குநர் முஹமட் சைஃபுடின்' அப்துல் ரசாக் தெரிவித்தார்.

“சிம்பாங் பூலாய்-கேமரன் மலை சாலை நெடுகிலும் மிகவும் ஆபத்தான மலைச் சாரல்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு சிம்பாங் பூலாய்-கேமரன் மலை சாலையில் உள்ள புளு வெலியில் சில கண்காணிப்பு சாதனங்களை நாங்கள் பொருத்தி இருக்கின்றோம்."மழை நீர் தடுப்பு நிலையங்கள், ஆபத்தான மற்றும் மிகவும் ஆபத்தான இதர இடங்களிலும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று சைஃபுடின் கூறினார்.

நிலச்சரிவுகள் ஏற்படுவதைத் தடுக்கும் முயற்சியாக, பாதிப்பு. ஏற்படக் கூடிய பகுதிகளில் பாறைகளை அடுக்கி வலையினால் மூடும் பணியை ஜேகேஆர் மேற்கொள்ளும் என்று அவர் தெரிவித்தார்.

நாடு முழுமையிலும் மொத்த 34,400 மலைச் சாரல் பகுதிகள் இருப்பதாகவும் எந்த நேரத்திலும் நிலச் சரிவு ஏற்படக் கூடிய 1,087 பகுதிகள் இருப்பதாகவும், பொதுப்பணி அமைச்சர் டத்தோ ஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி முன்னதாகக் கூறியிருந்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *