சமையல் எண்ணெய் பதுக்கல் கும்பல் முறியடிப்பு
- Surendran Sumdraraj
- 11 Mar, 2026
கோலாலம்பூர், மார்ச் 11-
உரிய உரிமம் இன்றி விற்பனை செய்வதற்காக உதவித்தொகை வழங்கப்பட்ட சமையல் எண்ணெயை குவித்து வைத்திருந்த ஒரு கும்பல் புத்ராஜெயா அருகே உள்ள வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் முறியடிக்கப்பட்டது.
உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்வாதார செலவு அமைச்சு (KPDN) அமலாக்க பிரிவு மேற்கொண்ட Ops Gerak நடவடிக்கையின் போது இந்த கும்பல் பிடிபட்டது. இந்த கும்பல் கடந்த மூன்று மாதங்களாக செயல்பட்டு வந்ததாக நம்பப்படுகிறது.
KPDN அமலாக்க இயக்குநர் டத்தோ அஸ்மான் ஆடாம் கூறுகையில், சோதனையின் போது அந்த வீட்டில் 78 பெட்டிகளில் சமையல் எண்ணெய் பாக்கெட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது. ஒவ்வொரு பெட்டியிலும் ஒரு கிலோ எடையுள்ள 17 பாக்கெட்டுகள் இருந்ததாக அவர் தெரிவித்தார்.
இதன்படி, அந்த இடத்தில் மொத்தமாக சுமார் 1,326 கிலோ சமையல் எண்ணெய் சேமித்து வைக்கப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



