லஞ்சம் கொடுப்பவர்களை நிரூபிப்பதில் சவால்கள் அதிகம் – SPRM

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 9-

நாட்டில் லஞ்சம் பெறுபவர்களுடன் ஒப்பிடும்போது, லஞ்சம் கொடுப்பவர்கள் குறைவாக வழக்குப் பதிவு செய்யப்படுவதற்குப் பல சவால்கள் காரணமாக இருப்பதாக ஊழல் தடுப்பு ஆணையத்தின் சட்டப்பிரிவு மூத்த துணை இயக்குநர் Datuk Ahmad Akram Gharib  தெரிவித்தார்.

இச்சூழலுக்கு, ஆதாரங்களைப் பெறுவதில் உள்ள சிரமம், மூன்றாம் தரப்பு சாட்சிகள் இல்லாமை, அதிகாரப்பூர்வ பதிவுகள் குறைவு, பணமாக பரிவர்த்தனை செய்வது மற்றும் இடைத்தரகர்கள் பயன்படுத்தப்படுவது ஆகியவை முக்கிய காரணிகளாக உள்ளன என்றார்.

லஞ்ச குற்றத்தை நிரூபிப்பது, சாதாரண குற்றங்களைப் போல எளிதல்ல என்றும் அவர் விளக்கினார்.

அத்தகைய குற்றங்களில் வழக்கமாக தெளிவான பாதிக்கப்பட்டவர், சுயாதீன சாட்சி அல்லது எளிதில் கிடைக்கக்கூடிய ஆவண ஆதாரம் இருப்பதில்லை என அவர் கூறினார்.

லஞ்சப் பரிவர்த்தனைகள் பெரும்பாலும் ரகசியமாக நடைபெறுகின்றன.

மேலும், லஞ்சம் கொடுப்பவரும் பெறுபவரும் ஒருவருக்கொருவர் நன்மை அடைவதுடன், இருவரும் குற்றத்தில் உடந்தையாக இருப்பதால், அந்தச் செயல் திட்டமிட்டு மறைக்கப்படுகிறது என Ahmad Akram தெரிவித்தார்.

இதனால், விசாரணை மற்றும் வழக்குத் தொடரும் செயல்முறையில் அதிகாரிகள் கூடுதல் சவால்களை எதிர்கொள்கிறார்கள்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *