கால்பந்து ரசிகர்களிடையே கைகலப்பு! காவல்துறை நடவடிக்கை!

top-news

ஏப்ரல் 27,


நேற்று நடைபெற்ற மலேசியக் கால்பந்து சுழற்கிண்ண இறுதியாட்டத்தில் JDT ரசிகர்களுக்கும் SRI PAHANG அணியின் ரசிகர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பு தொடர்பாகக் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்பந்து இறுதிச் சுற்று தொடங்கும் முன்னர் புக்கிட் ஜாலில் மைதானத்தின் வாகனம் நிறுத்துமிடத்தில் இந்த கைகலப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கைகலப்பில் ஈடுபட்டவர்களைப் பாதுகாவலர்கள் கட்டுப்படுத்தியதாகவும் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. கைகலப்பில் ஈடுபட்டவர்களிடமிருந்த நுழைவுச் சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் அரங்கத்தினுள் நுழையவும் தடை விதிக்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

Kekecohan tercetus antara penyokong JDT dan Sri Pahang sebelum final Piala FA Malaysia di Stadium Bukit Jalil. Polis mengesahkan tiada kecederaan serius. Tiket individu terlibat dirampas dan mereka dihalang memasuki stadium.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *