ஆட்சி நடத்துவது எப்படி என எங்களுக்குப் பாடம் எடுக்க வேண்டாம்! கிளாந்தான் அரசு!

top-news

ஏப்ரல் 11,

கிளாந்தானில் பாலியல் குற்றங்கள் அதிகரித்திருப்பதற்குக் கிளாந்தான் மாநில அரசசைச் சாடுவதில் எந்த பயனும் இல்லை என கிளாந்தான் மாநில மெந்திரி பெசார் Dato Mohd Nassuruddin Daud தெரிவித்தார். ஆட்சியை எப்படி நடத்த வேண்டும் என எங்களுக்கு யாரும் பாடம் எடுக்க வேண்டாம். கிளாந்தானில் ஒரு சிலர் செய்யும் குற்றங்களுக்கு ஒட்டு மொத்த மாநிலமும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவது போல சித்தரிக்க வேண்டாம் என கிளாந்தான் மெந்திரி பெசார் எச்சரிக்கை விடுத்தார்.

கிளாந்தானில் கடந்த 2023 ஆண்டு 206 பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் 2024 ஆண்டு 252 பாலியல் துன்புறுத்தல் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கிளாந்தான் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Mohd Yusoff Mamat தெரிவித்திருப்பது ஒரு புள்ளி விவரம் மட்டுமே என்றும், இதற்கு அரசாங்கம் பொறுப்பாக முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும் பிள்ளைகளின் வளர்ப்பில் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் தனிநபர் செய்யும் குற்றங்களுக்கு அரசாங்கம் பொறுப்பேற்காது என்றும் கிளாந்தான் மாநில மெந்திரி பெசார் Dato Mohd Nassuruddin Daud தெரிவித்தார்.

MB Kelantan menegaskan kerajaan negeri tidak patut dipersalahkan atas peningkatan kes gangguan seksual. Statistik hanyalah data, dan jenayah individu tidak menggambarkan keseluruhan negeri. Beliau menolak kritikan serta menasihati ibu bapa agar lebih prihatin.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *