சீனர்களுக்கு எளிதில் குடியுரிமை வழங்கியதாக கூறுவது அவதூறு: சைபுடின் நசூதின்
- Surendran Sumdraraj
- 13 May, 2026
கோலாலம்பூர், மே 13-
சீன நாட்டவர்களுக்குத் தாம் விரும்பியபடி மலேசிய குடியுரிமை வழங்கியதாகப் பரவி வரும் குற்றச்சாட்டுகள் முழுமையான அவதூறும் தீய நோக்கத்துடனான அரசியல் பிரச்சாரமும் ஆகும் என்று உள்துறை அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution Ismail தெரிவித்துள்ளார்.
இன்று வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில், குடியுரிமை வழங்கும் செயல்முறை மலேசிய அரசியலமைப்பு, நாட்டின் சட்டங்கள் மற்றும் கடுமையான பாதுகாப்பு பரிசோதனைகளின் அடிப்படையில் மட்டுமே நடைபெறும் என்றும் அவர் விளக்கமளித்தார்.
“குடியுரிமை வழங்குவது எவரின் தனிப்பட்ட விருப்பத்தின்படியும் நடைபெறாது. குறிப்பாக அரசியல் நோக்கங்களுக்காக யாருக்கும் சலுகை வழங்கப்படுவதில்லை,” என்று அவர் கூறினார்.
மேலும், “நான் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து, இந்த விவகாரம் தொடர்பான உண்மைகள் மற்றும் முழுமையான தரவுகளை பல முறை நாடாளுமன்றத்திலும் ஊடக சந்திப்புகளிலும் விளக்கியுள்ளேன்,” என்றும் சைபுடின் குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



