பள்ளத்தாக்கில் கவிழ்ந்த வாகனம்! ஒருவர் பலி! 13 பேர் படுகாயம்!
- Thinagaren Sanggaren
- 17 Jul, 2025
ஜூலை 17,
இன்று அதிகாலை கட்டுப்பாட்டை இழந்த Toyota Hilux சாலையிலிருந்து விலகி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வாகனத்திலிருந்த 13 பேர் படுகாயம் அடைந்ததுடன் பெண் பயணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதிகாலை 5.53 மணியளவில் Ladang Permai சாலையில் இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாகப் பொதுமக்களிடமிருந்து அவசர அழைப்பைப் பெற்றதும் 6 மீட்புப்படை அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக Lahad Datu மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Sumsoa Rashid தெரிவித்தார்.
விபத்துக்குள்ளான
Toyota Hilux வாகனம் தோட்டத்துப் பணியாளர்களை ஏற்றிச் சென்றதாக நம்பப்படுகிறது. ஒரே வாகனத்தில்
14 பேர் பயணித்ததாகவும் எடை தாங்காமல் 15 மீட்டர் ஆழத்திலுள்ள பள்ளத்தாக்கில் வாகனம்
சரிந்தததில் 33 வயதான Kalma எனும் உள்ளூர் பெண் உயிரிழந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. வாகனத்தின் ஓட்டுநர்
உட்பட 13 பேர் படுகாயம் அடைந்த நிலையில் Lahad Datu மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் விபத்துக் குறித்தான மேலதிக விசாரணைகளைக் காவல்துறையினர்
மேற்கொண்டு வருவதாக Lahad
Datu மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Sumsoa Rashid தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



