விபத்தில் பெண் காவல் அதிகாரி பலி!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 29, 

நேற்று காலை கட்டுப்பாட்டை இழந்த இரு வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் 37 வயதான பெண் காவல் அதிகாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காலை 7.15 மணிக்கு விபத்து குறித்து பொதுமக்களிடமிருந்து அவசர அழைப்பைப் பெற்றதும் மீட்பு அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக Iskandar Puteri, மாவட்டக் காவல் ஆணையர் M.Kumarasan தெரிவித்தார். உயிரிழந்த காவல் அதிகாரி TAMAN UNIVERSITI காவல் நிலையக் கோப்ரல் அதிகாரியான Fairuz fadila Musa என அடையாளம் காணப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கட்டுப்பாட்டை இழந்த Proton Waja  வாகனம் காவல் அதிகாரியின் Proton Saga வாகனத்தை மோதியதாக நம்பப்படுகிறது. Proton Waja வாகனத்தின் 41 வயதான ஓட்டுநரும் மற்றொரு பெண்ணும் Sultanah Aminah மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்கள் இருவரும் படுகாயம் அடைந்திருப்பதால் சிகிச்சைக்குப் பின்னர் விசாரணையை மேற்கொள்வதாக Iskandar Puteri, மாவட்டக் காவல் ஆணையர் M.Kumarasan தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *