வாகனம் மோதியதில் 10 வயது சிறுவர்கள் இருவர் பலி!

top-news
FREE WEBSITE AD

நவம்பர் 23,

இன்று காலை மிதிவண்டியில் சென்றுக் கொண்டிருந்த சிறுவர்களை வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காலை 9.15 மணிக்குக் கெடா யான் நகரில் உள்ள  Jalan Sedaka Tengah சாலையில் இந்த விபத்து நிகழ்ந்ததாக யான் மாவட்டக் காவல் ஆணையர் Hamizi Abdullah தெரிவித்தார். உயிரிழந்த இரு சிறுவர்களும் 10 வயது 11 வயதுள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் ஒரே மிதிவண்டியில் சென்ற சிறுவர்களைப் பின்னிருந்து வாகனம் மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக யான் மாவட்டக் காவல் ஆணையர் Hamizi Abdullah தெரிவித்தார். 

விபத்தின் போது பொதுமக்கள் வாகனமோட்டியைத் தடுத்து நிறுத்தியதாகவும் சம்மந்தப்பட்ட வாகனமோட்டி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் யான் மாவட்டக் காவல் ஆணையர் Hamizi Abdullah தெரிவித்தார். மேலதிக விசாரணைகளுக்கு உதவ விபத்தை நேரில் பார்த்தவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தில் சாட்சியம் அளிக்கும்படி யான் மாவட்டக் காவல் ஆணையர் Hamizi Abdullah கேட்டுக்கொண்டார். உயிரிழந்த சிறுவர்களின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக யான் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருப்பதாக யான் மாவட்டக் காவல் ஆணையர் Hamizi Abdullah தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *