நேரெதிரே மோதிய இரு வாகனங்கள்! 9 பேர் படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 02 Jun, 2025
ஜூன் 2,
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் எதிரில் வந்த மற்றொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இரு வாகனங்களிலிருந்த 9 பேரும் படுகாயம் அடைந்தனர். BINSULOKலிருந்து PALU நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த PERODUA MYVI வாகனம் எதிரில் வந்த TOYOTA AVANZA ரக வாகனத்தை மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்தில் பாதிக்கப்பட்ட 9 உள்ளூர்லாசிகளையும் மீட்புப் படையினர் உயிருடன் மீட்டதாகவும் தற்போது அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்திவ் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விபத்துக்கான மேலதிக விசாரணைகளையும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களையும் காவல்துறையின் விசாரணைக்குப் பின் தெரிவிக்கப்படும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Dua kenderaan bertembung secara berhadapan di jalan Binsulok-Palu akibat satu daripadanya hilang kawalan. Seramai 9 individu tempatan cedera dan sedang dirawat di hospital. Tiada kematian dilaporkan dan siasatan lanjut sedang dijalankan oleh pihak polis.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *