பட்டாசு கடையை மோதிய வாகனம்! நால்வர் படுகாயம்!

top-news

ஏப்ரல் 2,

கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரமிருந்த பட்டாசு கடைகளை மோதி விபத்துக்குள்ளானதில் வாகனத்திலிருந்த 4 இளைஞர்கள் படுகாயம் அடைந்ததாகச் சிலாங்கூர் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Ahmad Mukhlis Mukthar தெரிவித்தார். இன்று அதிகாலை 1 மணியளவில் விபத்துக் குறித்தான அவசர அழைப்பைப் பெற்றதும் சம்பவ இடத்திற்கு 8 மீட்பு அதிகாரிகள் விரைந்ததாக அவர் தெரிவித்தார். 

சபாக் பெர்னாமிலிருந்து Kampung Batu செல்லும் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரத்திலிருந்த பட்டாசு கடைகளை மோதியதும் தீ பிடித்ததாகவும் தீ பரவும் முன்னமே பொதுமக்களால் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் சிலாங்கூர் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Ahmad Mukhlis Mukthar தெரிவித்தார். விபத்தில் படுகாயம் அடைந்த 4 இளைஞர்களும் 20 வயதுக்குற்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.

Sebuah kenderaan hilang kawalan dan melanggar kedai mercun di Selangor menyebabkan empat remaja cedera. Insiden berlaku sekitar 1 pagi, dan kebakaran kecil berjaya dikawal oleh orang awam sebelum merebak. Pihak berkuasa sedang menyiasat kejadian.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *