மோட்டார் சைக்கிளை மோதிய மூதாட்டியின் வாகனம்! இளைஞர் பலி!

top-news
FREE WEBSITE AD

செப்டம்பர் 9,

மூதாட்டி ஒருவர் ஓட்டிச் சென்ற வாகனம் மோட்டார் சைக்கிளை மோதி விபத்தை ஏற்படுத்தியதில் இளம் மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் இன்று காலை 8 மணியளவில் ஜொகூரில் உள்ள  Jalan Masai Baru சாலையில் நிகழ்ந்ததாக Seri Alam, மாவட்டக் காவல் ஆணையர் Mohd Sohaimi Ishak தெரிவித்தார். விபத்தை ஏற்படுத்திய 69 வயதான உள்ளூர் மூதாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக Seri Alam, மாவட்டக் காவல் ஆணையர் Mohd Sohaimi Ishak தெரிவித்தார்

சாலையில் U TURN செய்யும் போது எதிரில் வந்த மோட்டார் சைக்கிளைக் கவனிக்கமால் வாகனத்தைச் செலுத்தியதால் இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சாலையில் திடீரென U TURN செய்த வாகனத்தை மோதி சாலை அருகாமையில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்த மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் உயிரிழந்தவர் 24 வயது உள்ளூர் இளைஞர் என்றும் Seri Alam, மாவட்டக் காவல் ஆணையர் Mohd Sohaimi Ishak தெரிவித்தார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *