அபாயகரமாக வாகனத்தைச் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய இளைஞர் கைது!

top-news
FREE WEBSITE AD

ஆகஸ்ட் 17,

நெடுஞ்சாலையில் சாலையில் சென்றுக்கொண்டிருந்த வாகனத்தைப் பின்னிருந்து வந்த மற்றொரு வாகனம் மோதி விபத்தை ஏற்படுத்தும்படியான காணொலி சமூக வலைத்தலங்களில் பரவியது. இச்சம்பவம் நேற்று அதிகாலை 1.20 மணிக்கு KESAS நெடுஞ்சாலையில் நிகழ்ந்ததாகவும் இந்த விபத்தில் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் தென் கிள்ளான் மாவட்டக் காவல் ஆணையர் Ramli Kasa தெரிவித்தார். 20 வயதுள்ள பெண் உட்பட இருவர் பயணித்த Perodua Alza ரக வாகனம் முழுமையாகத் தீயில் கருகியதாகவும் வாகனத்திலிருந்த இருவரும் சிராய்ப்புக் காயங்களுடன் மீட்கப்பட்டதாகவும் தென் கிள்ளான் மாவட்டக் காவல் ஆணையர் Ramli Kasa தெரிவித்தார்.

விபத்தை ஏற்படுத்திய MPV Kia வாகனத்திலிருந்த 20 வயது வாகனமோட்டியும் வாகனத்திலிருந்த இருவரும் எந்தவொரு காயங்களுக்குள்ளாகவில்லை என தென் கிள்ளான் மாவட்டக் காவல் ஆணையர் Ramli Kasa உறுதிப்படுத்தினார். விபத்து ஏற்பட்ட போது பின்னிருந்து வந்த மற்றொருTRELER லாரி இரு வாகனங்களையும் மோதியதாக நம்பப்படுகிறது. விபத்தால் சிராய்ப்புக் காயங்களுக்குள்ளான நால்வரை Tengku Ampuan Rahimah மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் விபத்தை ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தென் கிள்ளான் மாவட்டக் காவல் ஆணையர் Ramli Kasa தெரிவித்தார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *