நெடுஞ்சாலையில் தடம் புரண்ட வாகனம்! இருவர் காயம்!

top-news

ஜூன் 3,

கட்டுப்பாட்டை இழந்த வாகனம் அருகில் சென்றுக் கொண்டிருந்த மற்றொரு வாகனத்தை மோதி தடம் புரண்டதில் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என தாப்பா மாவட்டக் காவல் ஆணையர் Johari Yahya உறுதிப்படுத்தினார். இது தொடர்பானக் காணொலி சமூகவலைத்தளங்களில் பரவியதை அடுத்து Johari Yahya விளக்கமளித்தார். இச்சம்பவம் நேற்று காலை 11.45 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் தாப்பா அருகில் நிகழ்ந்ததாகவும் இது தொடர்பானக் காணொலி தவறான இடுகைகளுடன் சமூகவலைத்தளங்களில் பரவி வருவதாகவும் தாப்பா மாவட்டக் காவல் ஆணையர் Johari Yahya விளக்கமளித்தார்.

PERODUA BEZZA வாகனமோட்டியான 23 வயது இளம்பெண் கட்டுப்பாட்டை இழந்து அருகில் சென்றுக் கொண்டிருந்த Toyota Vios வாகனத்தை மோதியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான 23 வயது இளம் பெண்ணும் 42 வயது Toyota Vios வாகனமோட்டியான உள்ளூர் ஆடவரும் சிராய்ப்புக் காயங்களுடன் தப்பியதாகவும் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என தாப்பா மாவட்டக் காவல் ஆணையர் Johari Yahya உறுதிப்படுத்தினார்.

Dua cedera ringan selepas sebuah Perodua Bezza hilang kawalan lalu melanggar Toyota Vios sebelum terbabas di Lebuhraya Utara-Selatan berhampiran Tapah. Tiada kematian dilaporkan. Polis menafikan spekulasi tular di media sosial mengenai insiden tersebut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *