வாகனத்தை மோதிய லாரி! இருவர் பலி! ஒருவர் படுகாயம்!

top-news

ஏப்ரல் 25,

கட்டுப்பாட்டை இழந்த 3 டன் லாரி வாகனத்தை மோதி விபத்துக்குள்ளானதில் வாகனத்திலிருந்த 32 வயது ஆணும் பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் லாரி ஓட்டுநர் படுகாயம் அடைந்ததாகவும் சரவாக் மாநில மீட்பு ஆணையம் தெரிவித்துள்ளது. Jalan Serikin சாலையில் இன்று காலை 10.06 மணிக்கு இவ்விபத்து ஏற்பட்டதாகவும் வாகனத்திலிருந்த Nathaniel Joehensern எனும் 32 வயது ஆடவர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்த மற்றொரு பெண்ணின் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து ஏற்பட்டதற்கானக் காரணத்தைக் காவல் துறையினர் விசாரித்து வரும் நிலையில் 3 டன் லாரி ஓட்டுநர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பின்னர் விசாரணையைத் தொடர்வதாகவும் விபத்தில் நேரில் கண்டவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கும்படியும் சரவாக் மாநிலக் காவல்துறை வலியுறுத்தியது.

Dua individu maut manakala seorang lagi cedera selepas lori 3 tan hilang kawalan dan merempuh sebuah kenderaan di Jalan Serikin, Sarawak. Mangsa lelaki dikenali sebagai Nathaniel Joehensern, manakala identiti wanita belum dikenal pasti. Polis masih menyiasat punca kemalangan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *