விபத்தில் லாரி ஓட்டுநர் பலி! பெண்கள் இருவர் படுகாயம்!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 15,

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் லாரியை மோதி விபத்துக்குள்ளானதில் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 266 ஆவது கிலோ மீட்டரின் சிரம்பான் அருகில் நண்பகல் 12.51 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக Senawang மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர்  Nizam Yom தெரிவித்தார். பொதுமக்களிடமிருந்து விபத்துக் குறித்தான தகவலைப் பெற்றதும் சம்பவ இடத்திற்குக் காவல்துறையினருடன் விரைந்ததாக  Nizam Yom தெரிவித்தார். 

உயிரிழந்த லாரி ஓட்டுநர் 40 வயது உள்ளூர்வாசி என அடையாளம் காணப்பட்டதாகவும் விபத்தை ஏற்படுத்திய Perodua Ativa வாகனமோட்டியான  ஆடவர் சிராய்ப்புக் காயங்களுடன் தப்பியதாகவும் வாகனத்திலிருந்த இரு பெண்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் Senawang மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர்  Nizam Yom தெரிவித்தார். விபத்தில் படுகாயம் அடைந்த இரு பெண்களையும் மேலதிக சிகிச்சைக்காகச் சிரம்பான அரசு மருத்துவமனைகுக் கொண்டு சென்றிருப்பதாகவும் உயிரிழந்த 40 வயது லாரி ஓட்டுநரின் உடல் மேலதிக விசாரணைக்காகக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் Senawang மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர்  Nizam Yom தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *