லாரி விபத்தில் ஓட்டுநரும் இளைஞரும் பலி! சிறுவன் படுகாயம்!

top-news

ஏப்ரல் 25,

போக்குவரத்து விதிகளை மீறிய மோட்டார் சைக்கிளை மோதாமல் தவிர்க்கும் போது கட்டுப்பாட்டை இழந்த லாரி பாலத்தின் சுவற்றை மோதி விபத்துக்குள்ளானதில் 34 வயது லாரி ஓட்டுநரும் 18 வயது உதவியாளரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நேற்று மாலை 4 மணியளவில்  கோத்தா கினாபாலுவில் உள்ள Indah Permai சாலையில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 வயது சிறுவன் ஓட்டி மோட்டார் சைக்கிள் சாலையில் எதிர்திசையில் வந்ததை உணர்ந்த லாரி ஓட்டுநர் மோட்டார் சைக்கிளைத் தவிர்க்கும்போது இந்த விபத்து ஏற்பட்டதாகவும் பதற்றத்தில் 15 வயது மோட்டார் சைக்கிளோட்டியும் லாரியை மோதி விபத்துக்குள்ளானதாகவும் தெரிய வந்துள்ளது. 15 வயது மோட்டார் சைக்கிளோட்டி படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்நிலையில் காவல்துறையினர் மோலதிக விசாரணையை நடத்தி வருகின்றனர்.

Sebuah lori hilang kawalan dan melanggar dinding jambatan selepas cuba mengelak motosikal yang melanggar arah, menyebabkan pemandu lori berusia 34 tahun dan pembantunya berusia 18 tahun maut. Penunggang motosikal berusia 15 tahun cedera parah.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *