இராணுவ லாரி உட்பட 5 வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் 6 பேர் படுகாயம்!

top-news

மே 25,

LIMA'25 சர்வதேச இராணுவப் பாதுகாப்புக் கண்காட்சியிலிருந்து திரும்பிய இராணுவ லாரியும் 4 வாகனங்களும் விபத்துக்குள்ளானதில் சுமார் 30 பேர் பாதிக்கப்பட்டதாகவும் 4 இராணுவ அதிகாரிகளுடன் 1 பெண் இராணுவ அதிகாரியும் படுகாயம் அடைந்திருப்பதாகக் கெடா மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் AHMAD AMINUDDIN தெரிவித்தார். நேற்று பிற்பகல் 3 மணியளவில் SIMPANG TIGA, TELUK BARU LANGKAWI சாலையில் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் 40 பாதுகாப்பு அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து பாதிக்கப்பட்ட பொதுமக்களையும் அதிகாரிகளையும் மீட்டதாகக் கெடா மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் AHMAD AMINUDDIN தெரிவித்தார்.


விபத்து ஏற்பட்டதும் இராணுவ லாரி பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் லாரியிலிருந்த 25 இராணுவ அதிகாரிகள் சிராய்ப்புக் காயங்களுக்குள்ளானதும் பெண் இராணுவ அதிகாரி உட்பட ஐவர் படுகாயத்துடன் லங்காவியில் உள்ள SULTANAH MALIHA மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் இந்த விபத்தில் பொதுமக்கள் எவருப் பாதிக்கப்படவில்லை என்றும் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என கெடா மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் AHMAD AMINUDDIN விளக்கமளித்தார். விபத்து ஏற்பட்டதற்கானக் காரணத்தைக் காவல் துறையினர் விசாரித்து வருவதாக LANGKAWI மாவட்டக் காவல் ஆணையர் SHARIMAN ASHARI தெரிவித்தார்.

Seramai Enam orang cedera dalam kemalangan lima kenderaan termasuk lori TLDM di Langkawi, selepas trak tiga tan hilang kawalan. Dua mangsa dirawat di hospital. Tiada kematian dilaporkan. TLDM tubuh lembaga siasatan bagi mengenal pasti punca kejadian.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *