இரு லாரிகள் விபத்து! ஓட்டுநர் பலி!

top-news

மே 29,

கட்டுப்பாட்டை இழந்த லாரி மற்றொரு TRELER லாரியை மோதி விபத்துக்குள்ளானதில் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இன்று அதிகாலை 2.50 மணிக்கு WCE மேற்கு கடற்கரை நெடுஞ்சாலையின் தைப்பிங் அருகில் இந்த விபத்து ஏற்பட்டதாகப் பேராக் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Sabarodzi Nor Ahmad தெரிவித்தார். விபத்துக் குறித்தானத் தகவல் கிடைத்ததும் 10 நிமிடத்தில் 5 மீட்பு அதிகாரிகள் சம்பவ இடத்தை அடைந்ததாக அவர் தெரிவித்தார்.

விபத்துக்குள்ளான இரண்டு லாரிகளுக்கடையில் சிக்கிய 37 வயது ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததைச் சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்திய நிலையில் மற்றொரு லாரியின் ஓட்டுநர் காயங்களின்றி தப்பியதாகவும் Sabarodzi Nor Ahmad உறுதிப்படுத்தினார். உயிரிழந்த 37 வயது லாரி ஓட்டுநரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகத் தைப்பிங் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் விபத்து ஏற்பட்டதற்கானக் காரணத்தை விசாரித்து வருவதாகவும் Sabarodzi Nor Ahmad தெரிவித்தார்.

Seorang pemandu lori maut selepas lori yang dipandunya merempuh treler lain di WCE dekat Taiping. Mangsa berusia 37 tahun disahkan meninggal di tempat kejadian, manakala pemandu treler terselamat. Siasatan punca kemalangan sedang dijalankan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *