மோட்டார் சைக்கிளை மோதிய 66 வயது வாகனமோட்டி! இளைஞர் பலி!

top-news

மே 19,

கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையில் சென்றுக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை மோதி விபத்தை ஏற்படுத்தியதில் 25 வயது இளம் மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்தார். இன்று காலை 11.20 மணிக்கு ஜொகூர் பாருவிலிருந்து பெண்தியான் செல்லும் சாலையில் இந்த விபத்து ஏற்பட்டதாக Iskandar Puteri மாவட்டக் காவல் ஆணையர் M Kumarasan தெரிவித்தார். இது தொடர்பானக் காணொலி சமூகவலைத்தளங்களில் பகிர வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார்.

PERODUA MYVI வாகனத்தைச் செலுத்திய 66 வயது மூதாட்டி எதிரே சென்றுக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளைக் கவனிக்காமல் மோட்டார் சைக்கிளைப் பின்னிருந்து மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்தில் பாதிக்கப்பட்ட 25 வயது உள்ளூர் இளைஞர் சுல்தானா அமினா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய 66 வயது மூதாட்டியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக Iskandar Puteri மாவட்டக் காவல் ஆணையர் M Kumarasan தெரிவித்தார்.

Seorang pemuda berusia 25 tahun maut selepas motosikalnya dirempuh dari belakang oleh sebuah kereta dipandu wanita berusia 66 tahun di jalan Johor Bahru–Pontian pagi tadi. Polis menasihatkan agar video kejadian tidak dikongsi di media sosial.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *