நேருக்கு நேர் மோதிய 2 வாகனங்கள்! முதியவர் பலி!

top-news

மே 29,

கட்டுப்பாட்டை இழந்த வேன், எதிரில் வந்த வாகனத்தை மோதி விபத்துக்குள்ளானதில் 70 வயது முதியவர் பலியானார். நண்பகல் 12.21 மணியளவில் கூச்சிங் Kampung Senangeh Asajaya சாலையில் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் பொதுமக்களிடமிருந்து அவசர அழைப்பைப் பெற்றதும் மீட்புப் படை அதிகார்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் கூச்சிங் மாவட்ட மீட்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

வேன் ஓட்டுநரான 70 வயது Abdul Mutang எனும் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததைச் சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்திய நிலையில் விபத்தில் சிக்கிய மற்றொரு வாகனத்திலிருந்த மூவர் சிராய்ப்புக் காயங்களுடன் தப்பியதாகவும், பாதிக்கப்பட்ட மூவரும் Sadong Jaya மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்டதற்கானக் காரணத்தைக் காவல்துறையினர் விசாரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Seorang lelaki warga emas berusia 70 tahun maut selepas van yang dipandunya hilang kawalan dan bertembung dengan sebuah kenderaan lain di Kampung Senangeh Asajaya, Kuching. Tiga mangsa lain mengalami kecederaan ringan dan menerima rawatan di hospital.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *