பின்னிருந்து மோதிய வாகனம்! மூவர் படுகாயம்! 2 வயது சிறுமி பலி!

top-news

ஜூன் 1,

கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மற்றொரு வாகனத்தின் பின்னால் மோதி விபத்தை ஏற்படுத்தியதில் 2 வயது சிறுமி உயிரிழந்ததுடன் 7 மாதக் குழந்தையும் தாய் தந்தையர் என மூவரும் படுகாயம் அடைந்தனர். கட்டுப்பாட்டை இழந்த TOYOTA ALPHARD ரக வாகனம் PROTON SAGA வாகனத்தை மோதி விபத்துக்குள்ளாகும்படியானக் காணொலி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக Muar, மாவட்டக் காவல் ஆணையர் Raiz Mukhliz Azman Aziz தெரிவித்தார்.

இந்த விபத்து கடந்த கடந்த திங்கட்கிழமை காலை 7.30 மணிக்கு வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் மூவார் அருகில் நிகழ்ந்ததாகவும் விபத்தில் PROTON SAGA வாகனத்தில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் படுகாயம் அடைந்த நிலையில் மூவார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சிகிச்சை பலனின்றி 2 வயது சிறுமி நேற்று காலை உயிரிழந்ததாகவும் மேலும் தாய் தந்தையர் உட்பட 7 மாதக் குழந்தை படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் Muar, மாவட்டக் காவல் ஆணையர் Raiz Mukhliz Azman Aziz விளக்கமளித்தார். விபத்தை ஏற்படுத்திய TOYOTA ALPHARD ரக வாகனமோட்டி தடுப்புக் காவலில் விசாரிக்கப்பட்டு வருவதாக Muar, மாவட்டக் காவல் ஆணையர் Raiz Mukhliz Azman Aziz விளக்கமளித்தார்.

Sebuah Toyota Alphard merempuh Proton Saga dari belakang di lebuh raya berhampiran Muar, mengakibatkan seorang kanak-kanak perempuan berusia dua tahun maut. Tiga lagi ahli keluarganya termasuk bayi tujuh bulan cedera. Polis sedang menjalankan siasatan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *