வாகனத்தின் பின் மோதிய மோட்டார் சைக்கிளோட்டி பலி! ஏப்ரல் 2,

top-news

ஏப்ரல் 2,

சாலையில் சென்றுக் கொண்டிருந்த வாகனம் திடீரென நிறுத்தியதால் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்த வாகனத்தை மோதி விபத்துக்குள்ளானதில் 24 வயது மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பிற்பகல் 2.30 மணியளவில் ஜொகூர் பாருவில் உள்ள Jalan Kota Masai சாலையில் இவ்விபத்து நிகழ்ந்ததாக Seri Alam, மாவட்டக் காவல் ஆணையர் Mohd Sohaimi Ishak தெரிவித்தார்.


முன்னால் சென்றுக் கொண்டிருந்த PROTON SAGA வாகனம் திடீரென நடு சாலையில் நிறுத்தியதால் பின்னிருந்த Perodua Axia வாகனமும் கட்டுப்பாட்டை மீறி நிறுத்தியதாகவும் Perodua Axia வாகனத்தின் பின் வந்த Yamaha 135LC மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வாகனத்தில் மோதியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக Seri Alam, மாவட்டக் காவல் ஆணையர் Mohd Sohaimi Ishak தெரிவித்தார். விபத்துக்குக் காரணமான 41 வயது உள்ளூர் பெண்ணான PROTON SAGA வாகனமோட்டியும் Perodua Axia வாகனத்தின் ஓட்டுநரும் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Seorang penunggang motosikal maut selepas merempuh sebuah kenderaan yang berhenti secara tiba-tiba di Jalan Kota Masai, Johor Bahru. Kemalangan berlaku apabila PROTON SAGA berhenti mengejut menyebabkan Perodua Axia membrek mendadak. Pemandu kedua-dua kenderaan kini ditahan untuk siasatan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *