வாகனத்தை மோதி மோட்டார் சைக்கிளோட்டி பலி! -குவாந்தான்

top-news
FREE WEBSITE AD

ஆகஸ்ட் 5,

குவாந்தான் சாலையில் வாகனத்தை மோதிய மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குவாந்தானிலிருந்து கெமாமான் செல்லும் சாலையில் உள்ள PETRONAS நிலையத்திலிருந்து வெளியேறிய வாகனம் சாலையில் சென்றுக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளைக் கவனிக்காமல் சாலையைக் கடக்க முயற்சித்த போது இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

நேற்று மாலை 5.30 மணிக்கு விபத்துக் குறித்து பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததும் மீட்பு அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகக் குவாந்தான் மாவட்டக் காவல் ஆணையர் முகமட் அட்லி மாட் தாவுட் தெரிவித்தார். உயிரிழந்த மோட்டார் சைக்கிளோட்டி 38 வயதுடைய முகமட் சுஹைமி யூனுஸ் எனும் குவாந்தானைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் விபத்தை ஏற்படுத்திய வாகனமோட்டி 26 வயது கெமாமானைச் சேர்ந்த இளைஞர் என்றும் தெரிய வந்துள்ளதாகக் குவாந்தான் மாவட்டக் காவல் ஆணையர் முகமட் அட்லி மாட் தாவுட் தெரிவித்தார். விபத்தை ஏற்படுத்திய வாகனமோட்டியைத் தடுப்புக் காவலில் வைத்து விசாரணையை மேற்கொண்டு வருவதாகக் குவாந்தான் மாவட்டக் காவல் ஆணையர் முகமட் அட்லி மாட் தாவுட் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *