வாகனத்தை மோதிய மோட்டார் சைக்கிள்! இளைஞர் பலி!

top-news

மார்ச் 23,

நேற்றிரவு Jalan Sungai Putat சாலையில் Toyota Vellfire வாகனத்தை மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் 27 வயது மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இரவு 11.10 மணிக்கு மத்திய மலாக்கா காவல்நிலையத்திற்கு விபத்துக் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதாக மத்திய மலாக்கா மாவட்டக் காவல் ஆணையர் Christopher Patit தெரிவித்தார்.

சாலையைக் கடப்பதற்காக Toyota Vellfire வாகனம் முனைந்த போது சாலையில் வந்த மோட்டார் சைக்கிள் வாகனத்தை மோதியதாக நம்பப்படுகிறது. வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த 27 வயது மோட்டார் சைக்கிளோட்டி வீட்டிலிருந்து 650 மீட்டர் தூரமுள்ள சாலையில் விபத்துக்குள்ளானதாகவும் உயிரிழந்தவர் 27 வயது Muhammad Syabil Hakimi என அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்குக் காரணமான 61 வயது Toyota Vellfire வாகனமோட்டியிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக மத்திய மலாக்கா மாவட்டக் காவல் ஆணையர் Christopher Patit தெரிவித்தார்.

Seorang penunggang motosikal, Muhammad Syabil Hakimi (27) maut dalam kemalangan di Jalan Sungai Putat selepas bertembung dengan Toyota Vellfire. Insiden berlaku ketika kenderaan itu melintas jalan. Pemandu berusia 61 tahun sedang disiasat oleh pihak berkuasa.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *