இரு வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் வாகனமோட்டி பலி! தம்பதியர் படுகாயம்!

top-news

மார்ச் 13,

கிள்ளானிலிருந்து Sabak Bernam செல்லும் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் HILUX வாகனத்தை மோதி விபத்துக்குள்ளானதில் 39 வயது ஆடவர் உயிரிழந்தார். மாலை 5 மணிக்கு விபத்துக்குறித்தான அழைப்புக் கிடைத்து சம்பவ இடத்திற்கு மீட்புப் படையினருடன் விரைந்ததாக Sabak Bernam மாவட்டக் காவல் ஆணையர் Md Yusof Ahmad தெரிவித்தார்.

கனமழையின் காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்த TOYOTA VIOS ரக வாகனம் HILUX வாகனத்தை மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக Md Yusof Ahmad தெரிவித்தார். விபத்துக்குக் காரணமான TOYOTA VIOS ரக வாகனமோட்டியான 39 வயது உள்ளூர் ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் HILUX வாகனத்திலிருந்த 41 வயது 43 வயது கணவன் மனைவி இருவரும் படுகாயம் அடைந்ததாகவும், தம்பதியர் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் Sabak Bernam மாவட்டக் காவல் ஆணையர் Md Yusof Ahmad தெரிவித்தார்.

Seorang lelaki maut selepas kereta dipandunya hilang kawalan dan bertembung dengan Toyota Hilux di Kilometer 70 Jalan Klang-Teluk Intan, Sekinchan. Kejadian yanv berlaku ketika hujan lebat menyebabkan mangsa terbabas ke laluan bertentangan. Mayat mangsa dihantar ke Hospital Sabak Bernam.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *