விபத்துக்குள்ளான 4 வாகனங்கள்! முதியவர் பலி!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 11,

கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மற்ற வாகனங்களை மோதி விபத்தை ஏற்படுத்தியதில் 70 வயது மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே பலியானதுடன் மூவர் சிராய்ப்புக் காயங்களுக்குள்ளாகினர். பத்து பஹாட்டில் உள்ல Tanjung Laboh சாலையில் மாலை 6.20 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்ததாக BATU PAHAT மாவட்டக் காவல் ஆணையர் Shahrulanuar Mushaddat Abdullah Sani தெரிவித்தார். விபத்தில் பலியான முதியவரின் உடல் பிரேதப்பரிசோதனைக்காக  Sultanah Nora Ismail மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Proton Saga, Perodua Axia, Perodua Kancil, Perodua Viva, ஆகிய 4 கார்களும் ஒரு மோட்டார் சைக்கிளும் இந்த விபத்தில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் உயிரிழந்த 70 வயது முதியவர் மோட்டார் சைக்கிளோட்டி என கண்டறியப்பட்டுள்ளதாகவும் BATU PAHAT மாவட்டக் காவல் ஆணையர் Shahrulanuar Mushaddat Abdullah Sani தெரிவித்தார். வாகனமோட்டிகள் நால்வரும் சிராய்புக் காயங்களுக்குள்ளான நிலையில் விபத்தை ஏற்படுத்தியதாக நம்பப்படும் 35 வயது Proton Saga வாகனமோட்டியிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் BATU PAHAT மாவட்டக் காவல் ஆணையர் Shahrulanuar Mushaddat Abdullah Sani தெரிவித்தார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *