விபத்தில் பெண் மரணம், குழந்தை உட்பட 7 பேர் படுகாயம்!

top-news
FREE WEBSITE AD

செப்டம்பர் 16,

கட்டுப்பாட்டை இழந்த வாகனம் எதிரில் வந்த மற்றொரு வாகனத்தை மோதியதில் பெண் உயிரிழந்ததுடன் 7 பேர் படுகாயம் அடைந்தனர். நேற்று பிற்பகல் 2.36 மணிக்குப் பொதுமக்களிடமிருந்து அவசர அழைப்பைப் பெற்றதும் 10 மீட்பு அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக மெர்சிங் மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Abdul Muiz Mukhtar தெரிவித்தார். உயிரிழந்த பெண் 48 வயது Aishah Hasan என அடையாளம் காணப்பட்டிருப்பதாக மெர்சிங் மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Abdul Muiz Mukhtar தெரிவித்தார்.

ஜாலான் ஜெமாலுவாங்கிலிருந்து மெர்சின் செல்லும் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த TOYOTA VIOS வாகனம் HONDA BRV வாகனத்தை மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. TOYOTA VIOS வாகனத்திலிருந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் வாகனத்திலிருந்த குழந்தையும் மற்றொருவரும் படுகாயம் அடைந்திருப்பதாகவும் HONDA BRV வாகனத்திலிருந்த ஐவரும் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டதாகவும் மெர்சிங் மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Abdul Muiz Mukhtar தெரிவித்தார். விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தைக் காவல்துறையினர் விசாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் மெர்சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மெர்சிங் மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Abdul Muiz Mukhtar தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *